Paristamil Navigation Paristamil advert login

காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது பயங்கர தாக்குதல்! 28 பேர் பலி

காசாவில் உள்ள  அகதிகள் முகாம் மீது பயங்கர  தாக்குதல்! 28 பேர் பலி

20 மார்கழி 2023 புதன் 09:41 | பார்வைகள் : 6138


ஹமாஸ் மீது மேற்கொள்ளப்படும் போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

இந்நிலையில் காசாவில் உள்ள அகதிகள் மூகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

2 தினங்களுக்கு முன்பு தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்த அகதிகள் முகாம் மீது தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலில் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் காசாவின் யூனிஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதும் இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.

மேலும் இதில் பலாயிரக்கணககானோர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்