யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் கும்பல்
20 மார்கழி 2023 புதன் 09:32 | பார்வைகள் : 7363
யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதான சந்தேகநபர் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கைதான சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், சந்தேகநபருடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்தவர்களை இனங்கண்டுள்ளதுடன், அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan