இன்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றும் ஜனாதிபதி மக்ரோன்!!
20 மார்கழி 2023 புதன் 07:43 | பார்வைகள் : 16733
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இன்று புதன்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற உள்ளார்.
குடியேற்ற சட்டச் சீர்திருத்தம் தொடர்பில் இந்த உரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று பாராளுமன்றத்தில் இந்த சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இன்று புதன்கிழமை அவர் உரையாற்றுகிறார்.
அதேவேளை, 2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகள் குறித்தும், 2024 ஆம் ஆண்டின் வாய்ப்புகள் குறித்தும் அவர் உரையாற்றுவார் என அறிய முடிகிறது.
இந்த உரை ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் இருந்து நேரலையாக அஞ்சல் செய்யப்படும் என அறிய முடிகிறது.


























Bons Plans
Annuaire
Scan