Yvelines : தொடருந்தில் தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவர் கைது!
19 மார்கழி 2023 செவ்வாய் 19:00 | பார்வைகள் : 18191
பெண் பயணி ஒருவருக்கு முன்பாக தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Yvelines மாவட்டத்தில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றது.
டிசம்பர் 18, திங்கட்கிழமை மாலை பெண் பயணி ஒருவர் காவல்துறையினரை அழைத்ததைத் தொடர்ந்து, மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது. Versailles-Chantiers தொடருந்து நிலையத்தில் இருந்த தொடருந்து ஒன்றில் பயணித்த 51 வயதுடைய ஒருவர், பெண் பயணி ஒருவர் தனியாக இருப்பதை பார்த்து அவரிடம் ஆபாச செயலில் ஈடுபட்டார். அதையடுத்தே அப்பெண் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
அதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், குறித்த நபரை கைது செய்தனர். பாதிப்புக்குள்ளான அப்பெண் வழக்கு தொடுத்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan