குடிவரவு சட்டச் சீர்திருத்தம்! - ஐந்துமணிநேரம் பேச்சுவார்த்தை தோல்வி - இன்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை!
19 மார்கழி 2023 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 18863
குடிவரவு சட்டச் சீர்திருத்தத்தினை (loi immigration) நிறைவேற்றும் முனைப்பில் அரசு தீவிரமாக உள்ளது. பாராளுமன்றத்தில் டிசம்பர் 11 ஆம் திகதி ‘குடிவரவு சட்டச் சீர்திருத்தத்தினை’ உள்துறை அமைச்சர் Gérald Darmanin பாராளுமன்றத்தில் வாசித்தார். இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக motion de rejet முறையை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் தோல்வியடையச் செய்திருந்தனர்.
இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக இடதுசாரிகள் இணைந்த Nupes கட்சியினர், Rassemblement national கட்சியினரும், சோசலிச கட்சியினரும் என மொத்தமாக 270 வாக்குகளை அளித்தனர். 265 வாக்குகள் இருந்தாலே திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனும் நிலையில், 270 வாக்குகள் பதிவானமை மக்ரோனின் அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்வி என விமர்சிக்கப்பட்டது.
சீர்திருத்தத்தினை நிறைவேற்றியே தீருவது என உறுதியாக உள்ள, பிரதமர் Élisabeth Borne இடதுசாரி கட்சித்தலைவர்களையும், அரச ஆலோசர்களையும் அழைத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருந்தபோதும் அது சமரசமாக முடியவில்லை.
பின்னர் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களையும், செனட் சபை உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து Commission mixte paritaire (CMP) எனும் குழுவை உருவாக்கி, பாராளுமன்றத்தில் பேச்சுவார்த்தையினை நேற்று திங்கட்கிழமை இரவு ஆரம்பித்தனர். இந்த பேச்சுவார்த்தை ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.
எனினும் அதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. அதையடுத்து, இந்த விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு பிற்போடப்பட்டது.
***
குடிவரவு சட்டச் சீர்திருத்தமானது பிரான்சில் குடியேறும் அகதிகள் மற்றும் குடியேற்றவாதிகளுக்கான சட்டமாகும். அவர்களது ஆவணங்களை விரைவாக ஆராய்வது, கொடுப்பனவுகள் கொடுப்பது, சட்ட ஒழுங்கை மீறி செயற்படுவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது உள்ளிட்ட செயல்களை அனுமதிக்கிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan