பரிஸ் : பயணியை தண்டவாளத்தில் தள்ளி வீழ்த்திய ஒருவர் கைது!!
18 மார்கழி 2023 திங்கள் 20:00 | பார்வைகள் : 10294
பயணி ஒருவரை தண்டவாளத்தில் தள்ளி வீழ்த்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பரிசில் இன்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Opéra தொடருந்து நிலையில், மாலை 6 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெறுள்ளது. தொடருந்துக்காக காத்திருந்த ஒருவரை அங்கு வருகை தந்த ஒருவர் தள்ளி வீழ்த்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத குறித்த பயணி, நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார். அதிஷ்ட்டவச்சமாக அப்போது தொடருந்து எதுவும் வரவில்லை என்பதால் அவர் காயமின்றி உடனடியாக மீட்கப்பட்டார்.
தொடருந்து நிலையத்தில் காவலில் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக செயற்பட்டு, குறித்த தாக்குதலாளியை கைது செய்தனர். நிறைந்த மதுபோதையில் இருந்த அவர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவத்தினால் சில தொடருந்து சேவைகள் தடைப்பட்டன.


























Bons Plans
Annuaire
Scan