Yvelines : இணையத்தளமூடாக காதல்! - 41 வயதுடைய ஒருவருக்கு சரமாரி கத்திக்குத்து!!
18 மார்கழி 2023 திங்கள் 20:00 | பார்வைகள் : 9277
Verneuil-sur-Seine (Yvelines) நகரில் வசிக்கும் 41 வயதுடைய ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இணையத்தளமூடாக பழக்கமான ஒருவரை நேரில் சந்திக்க முறபட்டபோது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காலர்கள் பயன்படுத்தும் செயலி ஒன்றின் ஊடாக குறித்த நபர் முகம் தெரியாத ஒருவருடன் பழகியுள்ளார். பின்னர் அவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பு கத்திக்குத்து மற்றும் கொள்ளையில் முடிந்துள்ளது.
குறித்த நபரின் வருகைக்காக காத்திருந்த இருவர், அவரை கத்தியால் சரமாரியாக குத்தியதுடன், அவரிடம் இருந்து தொலைபேசி, கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
படுகாயமடைந்த அவர், Georges-Pompidou மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan