காலிமுகத்திடலில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் கழுத்தை நெரித்த நபர்

18 மார்கழி 2023 திங்கள் 14:30 | பார்வைகள் : 11421
காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் கழுத்தை நெரித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேவாலபொல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்,காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் கழுத்தில் தனது கையை வைத்து நெரித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் அந்த நபரின் பிடியில் இருந்து பொலிஸ் உத்தியோகஸ்தரை காப்பாற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை அறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025