பிரபல கார்களில் ஏற்பட்டுள்ள கோளாறு... கனடிய போக்குவரத்து திணைக்களம் அதிரடி

18 மார்கழி 2023 திங்கள் 12:42 | பார்வைகள் : 5921
கனடாவில் பயன்படுத்தப்படும் பிரபல கார்களில் ஒன்றான டெஸ்லா கார்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 193000 டெஸ்லா ரக கார்கள் மீள அழைக்கப்பட உள்ளதாக கனடிய போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் சுமார் இரண்டு மில்லியன் கார்களை இவ்வாறு மீளப் பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 5 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களே இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வாகனம் தொடர்பில் கனடிய தேசிய அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு நிர்வாக அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த கார்களில் காணப்படும் ஒடோ பைலட் அம்சத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.