Paristamil Navigation Paristamil advert login

அர்ஜென்டினாவில் புயல் காற்று- 13 பேர் பலி

அர்ஜென்டினாவில் புயல் காற்று- 13 பேர் பலி

18 மார்கழி 2023 திங்கள் 08:12 | பார்வைகள் : 5283


அர்ஜென்டினாவில் விளையாட்டு கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் 13 பேர் வரை  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அர்ஜெண்டினாவின் துறைமுக நகரான பஹியா பிளாங்காவை கடும் புயல் மற்றும் கனமழை தாக்கியது. 

கிட்டத்தட்ட 140 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றானது நகரை தாக்கியது.

இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அர்ஜெண்டினாவின் பஹியா பிளாங்காவில் ஏற்பட்ட புயல் காற்று மற்றும் கன மழைக்கு மத்தியில் அங்குள்ள விளையாட்டு கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விபத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

மேற்கூரை இடிந்து விழுந்த மைதானத்தில் ஸ்கேட்டிங் போட்டி நடைபெறும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்