யாழில் ஏற்பட்டுள்ள பாதிப்பு - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
18 மார்கழி 2023 திங்கள் 03:16 | பார்வைகள் : 6838
யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் டெங்கு நோய்க்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர். இன்றும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதனா வைத்தியசாலைக்கு அப்பால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளிகளை பராமரிக்க விடுதிகள் காணப்படுகிறது.
அதேவேளை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை, கோப்பாய் பிரதேச வைத்தியசாலை, சண்டிலிப்பாய் பிரதேச வைத்தியசாலைகளிலும் டெங்கு நோய் அறிகுறி தொடர்பிலான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். என தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan