இலங்கையில் நோய்வாய்ப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

17 மார்கழி 2023 ஞாயிறு 15:01 | பார்வைகள் : 8942
தற்போது நிலவும் மழையுடன் கூடிய குளிர் காலநிலை காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமாட்டி ரிச்வே வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், சளி, இருமல் மற்றும் காய்ச்சலினால் அதிகமாக சிறுவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் என்பன காணப்பட்டால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025