யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு செல்ல தயாரான இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
17 மார்கழி 2023 ஞாயிறு 12:00 | பார்வைகள் : 7493
யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலை சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டுவில் கண்ணன் கோவிலுக்கு அருகில் வாள் வெட்டு கும்பல் ஒன்று மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கமையவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது கைதான குறித்த இளைஞனுடன் வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan