வேலை நிறுத்தம்! - RER B சேவைகள் பாதிப்பு!!
16 மார்கழி 2023 சனி 18:30 | பார்வைகள் : 11979
மூன்று தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து, நாளை மறுநாள் திங்கட்கிழமை RER B சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.
இரண்டில் ஒரு’ RER B சேவை மட்டுமே இயக்கப்படும் என RAPT அறிவித்துள்ளது. ”டிசம்பர் 18 ஆம் திகதி, தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், RER B சேவைகளில் இரண்டில் ஒரு சேவை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது!” என RATP நிறுவனம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
La base, CGT மற்றும் FO ஆகிய மூன்று தொழிற்சங்க ஊழியர்களே வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
RER தொடருந்து சாரதி ஒருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. சாரதி மீது இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதி இது என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan