பதவியை ராஜினாமா செய்தார் பசில்
16 மார்கழி 2023 சனி 13:26 | பார்வைகள் : 7391
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
"பசில் ராஜபக்ச ஒரு நிறுவனராக கட்சி அமைப்பு பணிகளை செய்கிறார். அதனால் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக விடுவது என அவரும் கட்சியினரும் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.
எதிர்காலத்தில் நாம் எடுக்கும் அரசியல் தீர்மானங்களின் அடிப்படையில் அதற்குத் தேவையான ஒருவரை நியமிப்போம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மீண்டும் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதுடன், புதிய பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan