Paristamil Navigation Paristamil advert login

முன்னணி ஹீரோவுடன் இணையும் யோகிபாபு..

முன்னணி ஹீரோவுடன்  இணையும் யோகிபாபு..

16 மார்கழி 2023 சனி 12:16 | பார்வைகள் : 8342


நடிகர் யோகி பாபு கிட்டத்தட்ட தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முடித்துவிட்ட நிலையில் தற்போது தெலுங்கின் முன்னணி ஹீரோவின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது அவரது முதல் தெலுங்கு படம் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் யோகி பாபு காமெடி நடிகராக நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி ஒரு சில படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஷாருக்கான் படம் உள்பட ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்துள்ள யோகி பாபு முதல் முறையாக தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுதான் பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகும் த்ரில் காமெடி படம் என்று கூறப்படுகிறது.

பிரபாஸ் நடித்துள்ள ’சலார்’ விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ‘கல்கி 2898’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்று பிரமாண்டமாக உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் யோகி பாபு காமெடி கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அது மட்டும் இன்றி இந்த படத்தில் சஞ்சய் தத் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழில் முன்னணி காமெடி நடிகர் ஆக இருக்கும் யோகி பாபு தெலுங்கிலும் அறிமுகமாக இருப்பதை அடுத்து அங்கும் அவர் பிஸி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்