பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டலா?
16 மார்கழி 2023 சனி 12:11 | பார்வைகள் : 9237
நடிகை பூஜா ஹெக்டே துபாய்க்கு கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது அங்கு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’முகமூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் விஜய்யின் ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இதனை அடுத்து மீண்டும் அவர் தெலுங்கு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் துபாயில் கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து அந்த நபர் பூஜாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து துபாய் பத்திரிகையாளர் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அந்த செய்தியை பூஜா ஹெக்டே தரப்பு மறுத்துள்ளது. இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும் ஏதோ ஒரு காரணத்துக்காக இப்படி தவறான ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்றும் மறுக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan