Pôle emploi : புது இலட்சினை!

15 மார்கழி 2023 வெள்ளி 12:00 | பார்வைகள் : 10966
Pôle emploi நிறுவனம் தனது புதிய இலட்சினையை (logo) அறிமுகம் செய்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த புதிய இலட்சினையை தொழிலாளர் அமைச்சர் Olivier Dussopt அறிமுகப்படுத்தி வைத்தார். முன்னதாக இருந்த ”emploi” எனும் வார்த்தையில் வரும் e எழுத்தினையும், அதைச் சுற்றி மூவர்ண்ணத்தில் (பிரெஞ்சுக் கொடி வர்ணம்) வட்டமும் உள்ள இலட்சினை மாற்றப்பட்டு (புகைப்படம்) தற்போது புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறங்களிலும் , பல்வேறு அளவுகளிலும் உள்ள சிறிய வட்டங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்த இலட்சினைக்கு ஆதரவாக 55,000 பேர் வாக்களித்திருந்தனர்.
அதையத்து இந்த புதிய இலட்சினை 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025