Paristamil Navigation Paristamil advert login

அறிமுக டெஸ்டிலே 6 விக்கெட்களை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்

அறிமுக டெஸ்டிலே 6 விக்கெட்களை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்

15 மார்கழி 2023 வெள்ளி 09:29 | பார்வைகள் : 4150


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆமிர் ஜமால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 164 ஓட்டங்கள் விளாசினார். பாகிஸ்தானின் அறிமுக வேகப்பந்து ஆமிர் ஜமால் அவரை வெளியேற்றினார். 

அதன் பின்னர் டிராவிஸ் ஹெட்டினை 40 ஓட்டங்களிலும், அலெக்ஸ் கேரியை 34 ஓட்டங்களிலும் அவரே ஆட்டமிழக்க செய்தார். 

மிட்செல் ஸ்டார்க்கின் ஸ்டாம்புகளை ஜமால் பறக்கவிட்டார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் மிட்செல் மார்ஷ் அதிரடியாக 107 பந்துகளில் 90 ஓட்டங்கள் விளாசினார். இதில் ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடங்கும்.

அவுஸ்திரேலியாவின் கடைசி இரண்டு விக்கெட்டுகளான கம்மின்ஸ், லயன் இருவரும் ஜமால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதனால் அவுஸ்திரேலிய அணி 487 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆமிர் ஜமால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

குர்ரம் ஷசாத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்