இளம் பெண் மீது தாக்குதல் - இணையத்தில் பரவிய காணொளியை அடிப்படையாக கொண்டு விசாரணை!!
.jpg)
15 மார்கழி 2023 வெள்ளி 08:38 | பார்வைகள் : 10924
இளம் பெண் ஒருவர் மோசமாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதனை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இத்தாக்குதல் சம்பவம் லியோனின் (Lyon) 9 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளம் பெண் ஒருவரை இருவர் தாக்கியுள்ளனர். தாக்குதல் இடம்பெற்ற திகதி மற்றும் காரணம் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனை ஆதாரமாக கொண்டு லியோன் நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.