பிரித்தானியாவில் காணாமல் போன சிறுவன் - ஆறு வருடங்களின் பின்னர் பிரான்சில் கண்டுபிடிப்பு!!

14 மார்கழி 2023 வியாழன் 17:03 | பார்வைகள் : 9388
பிரித்தானியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஆறு வருடங்களின் பின்னர் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
Alex Batty எனும் சிறுவன் 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஸ்பெயினில் வைத்து காணாமல் போயிருந்தார். இந்த சம்பவம் அப்போது மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. 11 வயதுடைய குறித்த சிறுவன் தனது பெற்றோர்களுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றிருந்த போது அங்குவைத்து காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், ஆறு வருடங்கள் கழித்து குறித்த சிறுவன் அவரது 17 வயதில் கடந்த வாரத்தில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டார். Toulouse நகரின் கிழக்கு பகுதி ஒன்றில் வைத்து அவர் அடையாளம் காணப்பட்டதாக அந்நகர காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அவர் மிக விரைவில் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
புகைப்படத்தில் : சிறுவன் அலெக்ஸ், அவரது தாய் மற்றும் தாத்தா ஆகியோர்.
***
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025