₤100 யூரோக்களுக்கு மின்சார மகிழுந்து வாடகைக்கு!
15 மார்கழி 2023 வெள்ளி 21:48 | பார்வைகள் : 10887
மின்சார மகிழுந்துகளை மாதம் 100 யூரோக்கள் கட்டணத்தில் வாடகைக்கு விடும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி இம்மாவனுல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
இம்மானுவல் மக்ரோன் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த இந்த செயற்திட்டம் குறித்து உறுதியளித்திருந்தார். அதையடுத்து, 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து மாதம் 100 யூரோக்கள் கட்டணத்தினைச் செலுத்தி மின்சார மகிழுந்துகளை வாடகைக்கு பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த வசதி சில குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். வருடத்துக்கு 14,400 யூரோக்கள் வருமானம் பெறும் நபர்களுக்கு மட்டுமே இந்த மகிழுந்துகள் வாடகைக்கு வழங்கப்படும். கிட்டத்தட்ட 20,000 பேர் இந்த மகிழுந்துகளை வாடகைக்கு பெற ஏற்புடையவர்களாக உள்ளனர் எனவும் அறிய முடிகிறது.
இன்று டிசம்பர் 14, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது சமூகவலைத்தளமூடாக இதனை அறிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan