கடைசி டெஸ்ட் தொடரில் வார்னரின் சதம்!

14 மார்கழி 2023 வியாழன் 08:35 | பார்வைகள் : 5638
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சதம் விளாசினார்.
அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் (Perth) இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி டேவிட் வார்னர் (David Warner) மற்றும் உஸ்மான் கவாஜா (Usman Khawaja) ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
நிதானமாக ஆடிய கவாஜா 98 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 126 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய லபுசாக்னே 16 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஆனால் வார்னர் பவுண்டரிகளை விளாசி தனது 26வது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். தனது கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் வார்னர் சதம் அடித்திருப்பது அவரது ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்துள்ளது.
தற்போது வரை அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்கள் எடுத்துள்ளது. வார்னர் 104 ஓட்டங்களுடனும், ஸ்மித் 18 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1