யாருக்கெல்லாம் ரூ.6000 வெள்ள நிவாரணம்?: அரசாணை வெளியீடு
 
                    14 மார்கழி 2023 வியாழன் 04:42 | பார்வைகள் : 8063
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், யாருக்கெல்லாம் நிவாரண தொகை வழங்கப்படும் என்ற விபரங்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களுக்கு உட்பட்டவர்கள் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
யாருக்கெல்லாம் நிவாரணம்?
* மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு (மேற்குறிப்பிட்ட வட்டங்கள், கிராமங்களை சேர்ந்தவர்கள்) ரேஷன் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கி, நிவாரணம் வழங்கப்படும்.
* மத்திய, மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப ரேஷன் கார்டுதாரர்கள், பாதிப்பு விபரங்களை தங்களது வங்கி கணக்கு விபரத்துடன் தங்கள் பகுதிக்குரிய ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய நிவாரணம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்படும்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     



















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan