நோர்து-டேம் தேவாலயத்துக்கு தனித்துவமான ‘தீ தடுப்பு’ வசதி!!
13 மார்கழி 2023 புதன் 14:42 | பார்வைகள் : 16755
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் நோர்து-டேம் தேவாலயத்தின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்தது அறிந்ததே. தற்போது மிக விரைவாக திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், நோர்து-டேம் தேவாலயத்தில் தீயை தடுக்கும் சிறப்பு மற்றும் தனித்துவமான வசதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தேவாலயத்துக்கு பொறுப்பான தலைமை அதிகாரி Philippe Jost தெரிவித்தார். "dispositif de brumisation” என அழைக்கப்படும் தீயை அணைக்கும் அல்லது கட்டுப்படுத்தும் சாதனமானது மிக நுட்பமான செயற்திறன் கொண்டது எனவும், தீ அல்லது புகையினை மிக வேகமாக உணரும் தன்மை கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மாதிரி புகைப்படம்)
தீ பரவல் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்னர், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி குறித்த தேவாலயம் திறக்கப்படும் எனவும், முன்னதாக ஆண்டு ஒன்றுக்கு 12 மில்லியன் பேர் வருகை தந்த இங்கு, இதன் பின்னர் ஆண்டுக்கு 14 மில்லியன் பேரை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan