விசேட செய்தி : Rennes - ஆசிரியரை கத்தி மூலம் தாக்கிய 12 வயது மாணவி!
13 மார்கழி 2023 புதன் 12:49 | பார்வைகள் : 19422
12 வயதுடைய சிறுமி ஒருவர் பாடசாலை நேரத்தில் ஆசிரியர் ஒருவரை கத்தி மூலம் தாக்கியுள்ளார். Arras தாக்குதல் போன்று ஒன்று தாக்குதலை நிகழ்த்த திட்டமிட்டதாக மாணவி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
Rennes நகரில் உள்ள Les Hautes-Ourmes கல்லூரியில் இச்சம்பவம் 5 ஆம் தரம் பயிலும் 12 வயதுடைய மாணவி ஒருவர் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. 9.30 மணிக்கும் 9.50 மணிக்கும் இடையில் தனது ஆசிரியர் ஒருவரை கத்தி மூலம் தாக்கியுள்ளார். தனது புத்தக பொதியில் இருந்து உருவி எடுத்த கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு ஆசிரியரை நோக்கி ஓடியுள்ளார். திகைப்படைந்த ஆசிரியர் வகுப்பறையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
அவரைத் துரத்திச் சென்ற மாணவி, அவர் மீது பாய்ந்து கீழே தள்ளி விழுத்தியுள்ளார். அதற்குள்ளாக சக ஆசிரியர்கள் தலையிட்டு, குறித்த மாணவியை பிடித்துள்ளனர். ஆசிரியருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அதற்குள்ளாக காவல்துறையினர் சம்பவ இடத்தை வந்தடைந்தனர்.
குறித்த சிறுமி கைது செய்யப்பட்டார். அவர் அண்மையில் Arras நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் போன்ற ஒன்று இங்கு நிகழ்த்த திட்டமிட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
இலக்கு வைக்கப்பட்டவர் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியர் என அறிய முடிகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan