ஜெனீவா பயணத்தை இரத்துச் செய்தார் பிரதமர்!!
12 மார்கழி 2023 செவ்வாய் 17:23 | பார்வைகள் : 10845
பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கியுள்ள பிரதமர் Élisabeth Borne தனது ஜெனீவா பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.
ஜெனீவாவில் இடம்பெற உள்ள சர்வதேச அகதிகள் சபையில் நாளை புதன்கிழமை பிரதமர் Élisabeth Borne கலந்துகொள்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மேற்படி பயணத்தை அவர் இரத்துச் செய்துள்ளார்.
மக்ரோனின் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட ‘குடியேற்றவாதிகளுக்கான புதிய சட்டச் சீர்திருத்தம்’ பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கியுள்ளது. பாராளுமன்றத்தில் நிராகரிப்புச் செய்யப்பட்ட இந்த சட்டச்சீர்திருத்தத்தை மீள உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
இது தொடர்பான பல சந்திப்புக்களை பிரதமர் மேற்ற்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை எலிசே மாளிகையில் வைத்து சந்திக்கிறார்.
இந்த அரசியல் பரபரப்புகளுக்கு நடுவிலேயே அவர் தனது ஜெனீவா பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan