Essonne : எதிர் எதிரே மோதிய மகிழுந்துகள்! - இருவர் பலி! - சிறுவன் படுகாயம்!!

12 மார்கழி 2023 செவ்வாய் 16:54 | பார்வைகள் : 14686
அதிவேகமாக பயணித்த இரு மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 15 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
Essonne மாவட்டத்தின் 721 இலக்க இரண்டாம்கட்ட சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு 12.10 மணி அளவில் பயணித்த இரண்டு மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டுள்ளன. பெரும் சத்தத்தத்துடன் மகிழுந்துகள் வீதியில் இருந்து தூக்கி வீசப்பட்டன.
இந்த விபத்தில் 62 மற்றும் 60 வயதுடைய தம்பதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இவர்களில் 62 வயதுடைய கணவர் மகிழுந்தைச் செலுத்தியதாக அறிய முடிகிறது.
விபத்துக்குள்ளான இரண்டாவது மகிழுந்தை 15 வயதுடைய சிறுவன் ஒருவன் செலுத்தியதாக அறிய முடிகிறது. அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025