மனைவி கூட போட்டி இடும் கணவன்

12 மார்கழி 2023 செவ்வாய் 09:25 | பார்வைகள் : 5458
ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் கையில் தொடாமல் அதில் போட்ட பால்பாயிண்ட் பேனாவை எடுத்தால் பணம் கொடுப்பதாக மனைவியிடம் கணவர் கூறுகிறார்.
ஆனால் மனைவியோ நான் நிச்சயம் ஜெயித்து விடுவேன். பணத்தை கொடு என கேட்கிறார். அதற்கு கணவரோ இவர் எங்கே ஜெயிக்க போகிறார் என்ற நமட்டு சிரிப்புடன் முதலில் பேனாவை எடு பின்னர் பணம் தருகிறேன் என்றார்.
உடனே மனைவி கையில் ஒரு குவளையில் தண்ணீருடன் வந்தார். உடனே அதை பாட்டிலில் ஊற்றினார். பேனாவும் தண்ணீரில் மிதந்து வெளியே வந்தது. அதை பாட்டிலில் கைப்படாமல் எடுத்துக் கொடுத்து கணவரிடம் இருந்து காசை வாங்கிச் செல்கிறார். கணவரோ போச்சே போச்சே என்ற பாணியில் பரிதாபமாக பார்க்கிறார்.