2023 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த நூறு நகரங்கள்! - முதல் இடத்தில் பரிஸ்!!
12 மார்கழி 2023 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 9499
2023 அம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த நூறு நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளன. பட்டியலில் முதல் இடத்தை பிரான்ஸ் தலைநகர் பரிஸ் பிடித்துள்ளது.
ஆண்டுதோறும் Euromonitor International's Top 100 City Destinations எனும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பொருளாதாரம், வியாபார திறன், சுற்றுலாத்துறை, சுற்றுலாத்துறைக்கான கட்டுமானம், சுற்றுலாத்துறைக்கான அரச செயற்திட்டங்கள், சுகாதாரம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் முதலாவது இடத்தினை பரிஸ் பிடித்துள்ளது. தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக இதனை பரிஸ் தக்க வைத்துள்ளது.
இரண்டாவது இடத்தினை டுபாயும் மூன்றாவது இடத்தினை மட்ரிட் நகரமும் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த இலண்டன் நகரம் இம்முறை பத்தாவது இடத்துக்குச் சென்றுள்ளது. நான்காவது இடத்தில் ஜப்பானின் டோக்யோ நகரம் உள்ளது.
ஐந்தாவது இடத்தில் நெதர்லாந்தின் Amsterdam நகரமு, ஆறாவது இடத்தில் பெர்லின், ஏழாவது இடத்தில் ரோம், எட்டாவது இடத்தில் நியூயோர்க், ஒன்பதாவது இடத்தில் பர்சிலோனாவும் உள்ளது.
பிரான்சின் நீஸ் நகரம் 47 ஆவது இடத்தில் உள்ளது.
பிரித்தானியாவின் எடிபேர்க் நகரம் 62 ஆவது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் இறுதியாக இடம்பிடித்திருப்பது ஓமான் தலைநகரம் மஸ்கட் ஆகும்.


























Bons Plans
Annuaire
Scan