பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த உள்துறை அமைச்சர்! - ஏற்றுக்கொள்ள மறுத்த ஜனாதிபதி!

12 மார்கழி 2023 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 6362
உள்துறை அமைச்சர் Gérald Darmanin நேற்று திங்கட்கிழமை மாலை தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனிடம் வழங்கினார். ஆனால் அவர் இதனை நிராகரித்தார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குடியேற்றவாதிகளுக்கான புதிய சட்டத்திருத்தம் தோல்வியில் முடிந்ததை அடுத்து அவர் தனது பதவி விலகல் கடித்ததை ஜனாதிபதியிடம் வழங்கினார். மக்ரோனின் அரசாங்கம் சந்தித்த மிகப்பெரிய தோல்வி இது என விமர்சிக்கப்படும் நிலையில், அதற்கு பொறுப்பேற்கும் நோக்கோடு அமைச்சர் தனது பதவியை விட்டு வில தீர்மானித்திருந்தார்.
பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்ததும், உள்துறை அமைச்சர் நேற்று மாலை எலிசே மாளிகைக்கு சென்று, ஜனாதிபதியை சந்தித்து உரையாடினார். அதன் போதே அவர் தனது பதவிவிலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.
அதேவேளை, குடியேற்றவாதிகளுக்கான சட்டத்திருத்தம் நிராகரிக்கப்பட்டமை ஒரு ‘தோல்வி’ என்றே உள்துறை அமைச்சர் கருதுவதாக TF1 தொலைக்காட்சியில் அவர் நேற்று மாலை தெரிவித்தார். எவ்வாறாயினும், அவர் இந்த ‘குடியேற்றவாதிகளுக்கான சட்டத்திருத்தத்தை கைவிடப்போவதில்லை எனவும் உறுதியுடன் தெரிவித்தார்.