Seine-et-Marne : காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்! - இரண்டாவது நபரும் பலி!

11 மார்கழி 2023 திங்கள் 12:39 | பார்வைகள் : 8823
Seine-et-Marne மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கொல்லப்பட, அதே வயதுடைய இரண்டாவது இளைஞன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார்.
Neuilly-sur-Marne (Seine-Saint-Denis) நகரில் வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, இரு இளைஞர்கள் ஸ்கூட்டர் ஒன்றில் வேகமாக பயணிப்பதை பார்த்து, அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவர்கள் ஸ்கூட்டரின் வேகத்தை அதிகப்படுத்தியதோடு, அங்கிருந்து கிட்டத்தட்ட 2 கிலோமீற்றர்கள் தப்பிச் சென்று Chelles (Seine-et-Marne) நகரில் விபத்துக்குள்ளானார்கள்.
17 வயதுடைய இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை ஒருவர் பலியாகியிருந்தார். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டாவது நபரும் பலியாகியிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இருவேறு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025