கொள்ளையிடப்பட்ட கடை! - €600,000 மதிப்புள்ள பொருட்கள் மாயம்!!

11 மார்கழி 2023 திங்கள் 09:48 | பார்வைகள் : 16308
பரிசில் உள்ள ஆடம்பரப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. €600,000 யூரோக்கள் மதிப்புள்ள கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான Kith நிறுவனத்தின் காட்சியறை ஒன்றே கொள்ளையிடப்பட்டுள்ளது. பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் rue Pierre Charron வீதியில் உள்ள குறித்த காட்சியறைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உள்நுழைந்த கொள்ளையர்கள் சிலர், கடைக்குள் இருந்த ஊழியர்களை மிரட்டி அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். காவல்துறையினர் அழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. பல்வேறு கைக்கடிகாரங்களும், சில கைப்பைகளும் திருடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதன் மொத்த மதிப்பு €600,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் தொடர்பில் தகவல் அறிய முடியவில்லை.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025