ஆவணங்களற்றவர்களுக்கு மருத்துவ உதவி நிறுத்தம்! - உள்துறை அமைச்சர் ஆதரவு!

10 கார்த்திகை 2023 வெள்ளி 13:00 | பார்வைகள் : 13084
ஆவணங்களற்ற குடியேற்றவாதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவி நிறுத்துவதற்கு செனட் சபை ஆதரவு அளித்துள்ளது. இந்த முடிவினை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் சீர்திருத்தம் எதனையும் விரும்பவில்லை எனவும் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
l'Aide médicale d’État - AME என அழைக்கப்படும் அரசினால் வழங்கப்படும் மருத்துவ உதவிகளை, ஆவணங்களற்ற குடியேற்றவாதிகள்/ அகதிகள் பெற்றுக்கொள்ள முடியாது என செனட் மேற்சபை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் விவாதங்களை தோற்றுவித்துள்ளதோடு, அகதிகள் சார்ந்து இயங்கும் பல்வேறு சங்கங்கள் இதற்கு கண்டனமும் வெளியிட்டுள்ளன.
இந்த முடிவினை நான் அல்லது அரசாங்கமோ அறிவிக்கவில்லை. இது தொடர்பாக என்னிடம் கருத்துக்கள் இல்லை. செனட் மேற்சபையினர் அறிவித்த முடிவில் சீர்திருத்தம் கொண்டுவர நான் விரும்பவில்லை என உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.