Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு..

 இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு..

10 கார்த்திகை 2023 வெள்ளி 11:35 | பார்வைகள் : 8892


தென்னிந்திய திரையுலகில் மாபெரும் சாதனையாளரான, இசை மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்க உள்ளது. இத்திரைப்படத்தில் பன்முக திறமையாளர், தென்னிந்தியாவின் நட்சத்திர நடிகர் தனுஷ், இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அக்டோபர் 2024 இல் தொடங்க உள்ளது, 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இத்திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புக் கூட்டணி தென்னிந்தியத் திரைத்துறையில் பொழுதுபோக்கை உலகளாவிய தரத்துடன், அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுடன், ரசிகர்களுக்குச் சிறந்த கதைகளைக் கொண்டு வர முயற்சிக்கும். அடுத்த பத்தாண்டுகளில் உலகளாவிய தொழில்நுட்பத்திற்கு இணையான வளர்ச்சியைத் தென்னிந்தியத் திரைத்துறையில் கொண்டு வருவதில் இந்த கூட்டணி ஒரு ஊக்கியாக செயல்படும்..அடுத்த பத்தாண்டுகளில் தென்னிந்தியத் திரைத்துறையில் , குறிப்பிடத்தக்க வணிக வளர்ச்சியை இது வழங்கும். சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட உள்ள இந்த நிறுவனங்களின் கூட்டணிக்குத் திரு. இளம்பரிதி கஜேந்திரன் தலைவராக செயல்படுவார்.

குறிப்பாக கொரோனா தொற்று நோய் காலகட்டத்திற்குப் பிறகு, தென்னக பொழுதுபோக்குத் துறையானது, ஒரு வருடத்தில் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிடுகிறது. மற்றும் இந்தியப் பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரிய பாய்ச்சலைப் பெற்றுள்ளது ,மேலும் ஒரிஜினல் கதைகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது.

கனெக்ட் மீடியா என்பது, நாட்டின் முதல் பான்-இந்தியத் திரைப்பட ஸ்டுடியோ ஆகும், பிக் ஸ்கிரீன் எண்டர்டெய்னர்களில் சிறப்பு கவனம் செலுத்தி வரும் கனெக்ட் மீடியா, அனைத்து இந்திய மொழிகள் மற்றும் புவியியல் முழுவதும் பயணிக்கும் அழகான திரைப்படங்களை உருவாக்குகிறது. பல மெகா பட்ஜெட் படங்கள் தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்கு முந்தைய நிலையில் என கனெக்ட் மீடியா அடுத்த 3 ஆண்டுகளில், ரிலீஸ் ஆகும் படங்களின் வலுவான வரிசையைக் கொண்டுள்ளது. ஃபிலிம் ஸ்டுடியோ வணிகத்துடன் கூடுதலாக, தொழில் நுட்ப தொடர்புகள் மற்றும் தொழில்நுட்ப கூட்டமைப்பில் கனெக்ட் மீடியா குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது.

மெர்குரி, இன்று இந்தியாவைத் தவிர அமெரிக்கா, கனடா, கரீபியன் தீவுகள் மற்றும் ஐரோப்பாவில் முன்னிலையில் உள்ள ஆலோசனை, தொழில்நுட்பம், விளையாட்டு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் வணிக ஆர்வங்களைக் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். மெர்குரி நிறுவனம் வேகமாக விரிவடைந்து வருவதுடன், பல்வேறு பிரதேசங்களில் அதன் கூடாரங்களைப் பரப்பி வருகிறது. மெர்குரி பல விளையாட்டுக் குழுக்களைப் பிரதி நிதித்துவப்படுத்துவதைத் தவிர, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுக் களங்களில் இந்தியாவின் தலை சிறந்த சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

மெர்குரியின் முதன்மையான கவனம் எப்போதுமே பிராந்திய சினிமாவில் உள்ளது. பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன், கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய மற்றும் சிறந்த படங்களுடன்,அதிக அளவில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றுள்ளது. மெர்குரி பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும், கன்னட மொழி எனப் பிராந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்தி, பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கலைஞர்களுடன், பல ஒப்பந்தங்களைச் செய்து, அவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் இந்த பிராண்ட் பெரும் நம்பகத் தன்மையைப் பெற்றுள்ளது.., வித்யாசமான கதைக் களங்கள், வியக்கும் திரைக் கலைஞர்கள்,, அற்புத படைப்பாளிகள் என்று ரசிகர்களுக்கு மிகப் பெரும் கலை விருந்து காத்திருக்கிறது...

வர்த்தக‌ விளம்பரங்கள்