Paristamil Navigation Paristamil advert login

நியுயோர்க் டைம்ஸ் தலைமையகத்துக்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்

நியுயோர்க் டைம்ஸ் தலைமையகத்துக்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்

10 கார்த்திகை 2023 வெள்ளி 09:48 | பார்வைகள் : 9649


அமெரிக்காவில் நியுயோர்க்டைம்ஸ் அலுவலகத்திற்குள் பாலஸ்தீன ஆதரவாளர்கள்  நுழைந்துள்ளனர்.

மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் நியுயோர்க் டைம்ஸ் பக்கசார்பாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நியுயோர்க் டைம்சின் தலைமையலுவகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை பலர் உள்ளே நுழைந்து முன்பகுதியில் அமர்ந்து ஒரு மணிநேரத்திற்கும் மேல்  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்

ஆர்ப்பாட்டக்காரர்கள் காசாவில் யுத்தநிறுத்தத்தை கோரியதுடன் நியுயோர்க் டைம்ஸ் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றது என குற்றம்சாட்டினர்.

ரைட்டர்ஸ் புளொக் என்ற ஊடகபணியாளர்கள் என்ற அமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் காசாவில்   கொல்லப்பட்ட  36பத்திரிகையாளர்களின் பெயர்களையும் வாசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்