ஐஸ்லாந்து நாட்டில் 24 மணித்தியாலங்களில் 1000 நிலநடுக்கங்கள்!

10 கார்த்திகை 2023 வெள்ளி 07:50 | பார்வைகள் : 8624
ஐஸ்லாந்து நாட்டில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பம் 24 மணித்தியாலங்களில் சுமார் 1,000 நிலநடுக்கங்களால் தாக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சுற்றுலா தலமானது மூடப்பட்டுள்ளது.
மேலும், இது எரிமலை வெடிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் ப்ளூ லகூன் அதன் செயல்பாடுகளை ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கான முடிவை எடுத்துள்ளது என்று தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.