யூத-எதிர்ப்புக்கு எதிராக பரிசில் மாபெரும் பேரணி! - பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு!!

9 கார்த்திகை 2023 வியாழன் 12:28 | பார்வைகள் : 14369
யூதமதம் மீதான எதிர்புகளை கண்டித்து பரிசில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளிட்ட பல பிரபலங்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த பேரணி இடம்பெற உள்ளது. பிரான்சில் யூத மதம் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நாஸி இலட்சணைகள் சுவற்றில் வரைவது, யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனைக் கண்டித்து இந்த பேரணி இடம்பெற உள்ளது.
இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து பங்கேற்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலா சர்கோஷியும் இந்த பேரணியில் பங்கேற்பதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
அதேவேளை, பல்வேறு இடதுசாரி கட்சியினரும் இந்த பேரணியில் கலந்துகொள்ள உள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025