உக்ரேனுக்கு மேலும் 200 மில்லியன் யூரோக்கள் நிதி உதவி!
8 கார்த்திகை 2023 புதன் 15:22 | பார்வைகள் : 11276
உக்ரேனிய இராணுவத்தினருக்கு 200 மில்லியன் யூரோக்கள் நிதி வழங்க உள்ளதாக பிரான்சின் இராணுவ அமைச்சர் அறிவித்துள்ளார்.
பிரான்சின் இராணுவ அமைச்சர் Sébastien Lecornu இதனை இன்று பாராளுமன்றத்துக்கு முன்பாக வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்தார். உக்ரேனின் இராணுவத்தினருக்கு தேவையான உபகரணங்கள், ஆயுதங்களை வாங்குவதற்குரிய நிதியாக இது இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இரஷ்ய-உக்ரேன் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை பல தடவைகள் உக்ரேனுக்கான உதவிகளை பிரான்ஸ் வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நிதி உதவியை வழங்க உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan