கொழும்பில் வேரோடு சாய்ந்த 32 மரங்கள்
8 கார்த்திகை 2023 புதன் 07:26 | பார்வைகள் : 11907
கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய பலத்த காற்றுடன் வீழ்ந்த மரங்களை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
நேற்று மாலை மரங்களை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரங்கள் வேரோடு சாய்ந்ததால் கொழும்பில் பல பிரதான வீதிகள் மற்றும் துணை வீதிகள் தடைப்பட்டதாகவும், இந்த மரங்கள் நேற்றிரவு அகற்றப்பட்டதாகவும் கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் மட்டும் 32 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக நேற்று இரவு கொழும்பு வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

























Bons Plans
Annuaire
Scan