Paristamil Navigation Paristamil advert login

காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேலிய இராணுவம்

காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேலிய இராணுவம்

8 கார்த்திகை 2023 புதன் 04:17 | பார்வைகள் : 9356


இஸ்ரேல் காசா போர் ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகின்றது.

காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவத்தினர் காசாவின் மையபகுதியில் நிலைகொண்டுள்ளனர் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடல் வான் தரைவழி தாக்குதல்களை மேற்கொண்டு படையினர் காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவை சுற்றிவளைத்து படையினர்  அதன் உள்ளே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

காசா மக்களை தயவு செய்து தெற்கிற்கு செல்லுமாறு அவர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்