Paristamil Navigation Paristamil advert login

ஆறு மாதத்துக்காக மழை கொட்டித்தீர்த்தது! - வெள்ளத்தில் மூழ்கியுள்ள Pas-de-Calais!!

ஆறு மாதத்துக்காக மழை கொட்டித்தீர்த்தது! - வெள்ளத்தில் மூழ்கியுள்ள Pas-de-Calais!!

7 கார்த்திகை 2023 செவ்வாய் 17:00 | பார்வைகள் : 10413


Pas-de-Calais மாவட்டம் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத மழை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆறு மாத காலத்துக்கான மழையை கடந்த ஒரு மாதத்தில் கொட்டித்தீர்த்துள்ளது.

பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீதிகள் முடக்கப்பட்டும், பாடசாலைகள் மூடப்பட்டும், பொதுமக்கள் பலர் வெளியேற்றப்பட்டும் இருப்பதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை மட்டும் 400 வரையான மீட்புப்பணியினை தீயணைப்பு படையினர் மேற்கொண்டிருந்தனர்.

பா-து-கலே மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை கிட்டத்தட்ட 150 பாடசாலைகள் வெள்ளம் காரணமாக மூடப்பட்டன.

வர்த்தக‌ விளம்பரங்கள்