தாமரை கோபுரத்தில் ஆரம்பமாகியுள்ள புதிய விளையாட்டுகள்!
7 கார்த்திகை 2023 செவ்வாய் 15:07 | பார்வைகள் : 8063
கொழும்பு தாமரை கோபுரத்தில் கயிறு ஏறும் பொழுதுபோக்கு விளையாட்டுகள் ஆரம்பமாகியுள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் முதன்முதலாக இந்த விளையாட்டுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தாமரை கோபுர நிர்வாகம் கூறியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பு தாமரை கோபுரத்தை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு நிறைவுற்றிருந்தன. தற்போது தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், கொழும்பில் வளர்ந்தவரும் பிரதான வர்த்தக மையங்களில் ஒன்றாகவும் தாமரை கோபுரம் செயல்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan