Paristamil Navigation Paristamil advert login

சர்ச்சையில் சிக்கியுள்ள பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ!

சர்ச்சையில் சிக்கியுள்ள பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ!

7 கார்த்திகை 2023 செவ்வாய் 12:52 | பார்வைகள் : 8513


பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ பரிசில் இருந்து பிரெஞ்சு பொல்னீசியன் தீவான Tahiti இற்கு பயணித்திருந்தார். இந்த பாயணத்துக்காக வர் 60,000 யூரோக்கள் செலவிட்டிருந்தார். இந்த தொகை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, ஒலிம்பிக் போட்டிகளுக்கான பிரெஞ்சுக் குழுவின் துணைத் தலைவர் Pierre Rabadan ஆகியோர் கடந்த ஒக்டோபரின் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த பயணத்துக்காக 18,545 யூரோக்கள் இதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பயணத்தின் மொத்த செலவு 59,500 யூரோக்கள் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொகை பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பல விமர்சனங்களும் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. Tahiti  தீவில் இருந்து அவர் பயணத்திகதியை விட ஓரிரு நாட்கள் தமதமாகவே பரிசுக்கு திரும்பியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆன் இதால்கோ தெரிவிக்கையில், 

Tahiti தீவில் தங்கியிருந்த மேலதிக நாட்களில் தனது சொந்த பணத்தை செலவிட்டிருந்ததாகவும், பரிசுக்கு திரும்புவதற்காக பயணச்சிட்டையினை தனது சொந்த பணத்தில் பெற்றுக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்