விஜய் 68 அப்டேட் தந்த அர்ச்சனா கல்பாதி

7 கார்த்திகை 2023 செவ்வாய் 12:43 | பார்வைகள் : 7534
இயக்குனர் வெங்கட் பிரபு விறுவிறுப்பாக ‘தளபதி 68’ படத்தை இயக்கி வரும் நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு விடுமுறை அளித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது என்பதும் அதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடனமாடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியானது.
இதையடுத்து தற்போது அடுத்த கட்டமாக படக்குழுவினர் தாய்லாந்து சென்று இருக்கும் நிலையில் அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று வெங்கட் பிரபு தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எங்கள் நிறுவனத்தின் பட இயக்குனருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களுக்கு எல்லாவற்றிலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
மேலும் ‘தளபதி 68’ படத்தின் அப்டேட் என்னவெனில் தாய்லாந்தில் நேற்று அதிரடி ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டது. நேற்றிரவும் படப்பிடிப்பு நடைபெற்றதால் இன்று இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு பிறந்த நாளை முன்னிட்டு விடுமுறை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வெங்கட் பிரபுவுடன் இணைந்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025