கொழும்பில் கடும் மழை - நீரில் முழ்கிய வீதிகள்
7 கார்த்திகை 2023 செவ்வாய் 12:37 | பார்வைகள் : 8918
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆமர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஆமர் வீதி பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியின் ஊடாக பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, கொழும்பு ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், கடும் காற்று, இடியுடன் கூடிய மழை காரணமாக கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பல பகுதியில் மரங்கள் சறிந்து வீழ்ந்துள்ளன. கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
கொழும்பில் பெய்யும் காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக பல பகுதிகளில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.


























Bons Plans
Annuaire
Scan