இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தீவிரம் - உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை

7 கார்த்திகை 2023 செவ்வாய் 06:57 | பார்வைகள் : 7986
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் பலி எண்ணிக்கையானது 11 ஆயிரத்தை கடந்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 31வது நாளாக நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி ஹமாஸ் தாக்குதல் தொடங்கியதுடன், இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து நூற்றுக்கணக்கானோரை கொன்று 250 க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதனை அடுத்து பதிலடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், காசாவில் உள்ள மருத்துவமனை, அகதிகள் முகாம் என பாகுபாடு இல்லாமல் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் வருகின்றனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போரில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,330 ஆக அதிகரித்துள்ளது.
இதில் இஸ்ரேலில் மட்டும் 1,405 பேர் ஹமாஸின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படையின் பதிலடி தாக்குதலில் பாலஸ்தீனத்தின் காசாவில் இதுவரை 9,770 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதைப்போல பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் 155 பேர் உயிரிழந்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025