இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்த அரசாங்கம்
6 கார்த்திகை 2023 திங்கள் 08:42 | பார்வைகள் : 7288
இலங்கை அணியின் தொடர் மோசமான தோல்விகளை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் 55 ஓட்டங்களுக்கு இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சுருண்டதுடன் 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக 50 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட்டாகி 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த தொடர் மோசமான தோல்விகள் குறித்து இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர், கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் ஆகியோரிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு வருகிறது.
இந்நிலையில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மோசமான தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு அதிரடியாக கலைத்துள்ளது.
மேலும் அதற்கு மாற்றாக 1996ம் ஆண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜூன ரணதுங்கா தலைமையில், ஓய்வு பெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய இடைக்கால குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan