ஹமாஸ் தாக்குதலில் 40 பிரெஞ்சு மக்கள் பலி! - எட்டுபேரை காணவில்லை!
6 கார்த்திகை 2023 திங்கள் 07:47 | பார்வைகள் : 9482
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் மொத்தமாக 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரதமர் Élisabeth Borne அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை மாலை வெளியான அறிக்கையில் 39 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளதாக இன்று காலை பிரதமர் தெரிவித்தார். அதேவேளை, எட்டுப்பேர் குறித்த தகவல்கள் இல்லை எனவும்,. அவர்களில் பணயக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரிடம் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ”“எங்கள் நாட்டில் யூத எதிர்ப்பு மீண்டும் எழுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் சிக்கலற்றவர்களாக இருப்போம். குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.


























Bons Plans
Annuaire
Scan