யாழில் தனியார் விடுதியில் சடலம் மீட்பு - குழப்பத்தில் பொலிஸார்
6 கார்த்திகை 2023 திங்கள் 06:29 | பார்வைகள் : 6897
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு லால் பெரேரா என்கிற 61 வயதுடைய தென் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
மூன்று நாட்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்த நிலையில் அறைக்கு வெளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan